Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

காரைதீவின் எதிர்கால வளர்ச்சிக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

Posted on July 30, 2025 by Admin | 190 Views

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நேற்று (29.07.2025) காரைதீவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாட்டின் அபிவிருத்தி பணிகள் மற்றும் பிரதேசத்தின் முன்னேற்றத் திட்டங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கே. கோடிஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் திரு. எஸ். பாஸ்கரன், பிரதித் தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், சபை உறுப்பினர்கள், பல திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், பிரதேச வளர்ச்சிக்கான கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க உறுதுணையாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.