Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

Posted on July 31, 2025 by Hafees | 296 Views

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன, இன்று (31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம நீதவான் நீதிமன்றம், 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் அடிப்படையில் பிணை வழங்கும் உத்தரவை பிறப்பித்தது.

வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று ரொஷேல் அபேகுணவர்தன, வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவில் சரணடைந்தார். அப்போது 9 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு மத்துகம பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டார்.

இன்று மத்துகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின், நீதிமன்றம் பிணை வழங்கி அவரை விடுவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன