அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வயம்ப பல்கலைக்கழக மாணவர் ஏ.ஜி.எம். அஸீம், தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த தொழில் தள பயிற்சியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் Bachelor of Engineering Technology in Construction Technology எனும் கற்கையை பயிலும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களில் குறிப்பிடத்தக்கவாறு 7வது இடத்தில் தேர்வு பெற்றுள்ளார்.
இந்த விருது, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் கொரிய அரசாங்கத்தின் KOICA ஆகியவை இணைந்து செயல்படுத்தும் Career 1 தேசிய திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகளுக்காக 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாவது 11 நபர்களுக்கு “சிறந்த பயிற்சியாளர் விருது” வழங்கப்படவுள்ளதோடு, மற்ற 19 பேருக்கு “அர்ப்பணிப்பு பயிற்சியாளர் விருது” வழங்கப்படவுள்ளது. இதில் 26 வயதினையுடைய அஸீம் 7வது இடத்தைக் கைப்பற்றி சிறந்த பயிற்சியாளர் விருதுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பது அட்டாளைச்சேனை மக்களுக்கு ஒரு பெரும் கௌரவமாகும்.
விருது வழங்கும் முக்கிய நிகழ்வு 2025 ஆகஸ்ட் 13ஆம் திகதி, கொழும்பு Waters Edge ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அஸீம், தனது இளம்வயதில் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளார்:
இவ்வாறு பல துறைகளில் கல்வி கற்று வளர்ந்து வரும் அஸீமுக்கு வழங்கப்படும் இந்த தேசிய விருது, அட்டாளைச்சேனை மண்ணுக்கும் இளம் தலைமுறைக்கும் ஒரு பெரும் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
அஸீமுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!