அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தராக பணியாற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த, ஏ.எச்.எம். மிஸ்பர் தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த தொழில் வழிகாட்டல் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கணக்கியல் பட்டதாரியான இவர் diploma in psychology கற்கை நெறியை நிறைவு செய்துள்ளதுடன் இலங்கையில் தொழில் வழிகாட்டல் துறையில் NVQ சான்றிதழை 22 உத்தியோகத்தர்கள் பெற்ற நிலையில் இப்பிராந்தியத்தில் அச்சான்றிதழை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த, ஏ.எச்.எம். மிஸ்பர் பெற்றிருப்பது இப்பிராந்தியத்திற்கே புகழ் சேர்க்கும் விடயமாகும்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 386 தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களில், 118 உத்தியோகத்தர்கள் இந்த விருதுக்குப் போட்டியிட்ட நிலையில், இறுதி சுற்றுக்கு 16 பேர் மட்டுமே தெரிவானார்கள். அதில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்த மிஸ்பர் அட்டாளைச்சேனை மண்ணின் பெருமையை நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த கௌரவம், மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் கொரிய அரசின் KOICA நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Career 1 தேசிய திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
விருது வழங்கும் நிகழ்ச்சி, 2025 ஆகஸ்ட் 13ஆம் திகதி, கொழும்பு Waters Edge ஹோட்டலில் நடைபெற உள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் காட்டிய தன்னலமற்ற அர்ப்பணிப்பு, புதுமையான வழிகாட்டல் முறைகள், மற்றும் தொடர்ந்து பெற்ற வெற்றிகள் அனைத்தும் இந்த தேசிய அங்கீகாரத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.