Top News
| திருக்கோவில், அக்கரைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு | | இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் |
Oct 24, 2026

GovPay ஊடாக 50அரச சேவைகளுக்கான வசதிகள்

Posted on August 10, 2025 by Admin | 335 Views

GovPay கட்டமைப்புடன் மேலும் 50 அரசு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருணி ஸ்ரீ தனபால தெரிவித்ததாவது, செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய இந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

GovPay திட்டத்தின் விரிவாக்கம் மூலம் பொதுமக்கள், பல்வேறு அரசு சேவைகளை ஆன்லைன் வழியாக விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள்.