அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் அஸ்வர் சாலி அவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள் நேற்று (10.08.2025) அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிற்கு களவிஜயம் மேற்கொண்டார்.
மையவாடி மற்றும் மீனவர் குடியிருப்பு பகுதிகளின் நிலமைகளை நேரில் பார்வையிட்ட அவர், காணப்பட்ட குறைபாடுகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இவ் விஜயத்தின் போது, அவசர புனரமைப்பு தேவைப்படும் சாலைகளை கௌரவ உறுப்பினர் அஸ்வர் சாலி மற்றும் சமூக சேவையாளர் கே.அப்துல் ஹமீட்(ஜேபி) ஆகியோர் இணைந்து அடையாளப்படுத்தினர்.
பிரதானமாக, கோணாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மையவாடிக்கு செல்லும் RDS வீதி, முஃமின் பள்ளிவாசல் வீதி, கடற்கரை வீதி, ஆராச்சியார் கிழக்கு வீதி ஆகியவை புனரமைப்பு பட்டியலில் இடம்பெற்றன. மேலும், மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று, சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் தவிசாளரால் வழங்கப்பட்டன.
இக்களவிஜயத்தில் பெரியபள்ளி வட்டார உறுப்பினரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான கௌரவ ஏ.எல். பாயிஸ், தொழிநுட்ப அதிகாரிகள், மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.