Top News
| மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர் கைது | | அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை |
Sep 2, 2026

வியட்நாம் பெண் மொரகல்ல கடலில் மூழ்கி மரணம்

Posted on August 11, 2025 by Admin | 346 Views

மொரகல்ல கடற்கரையில் இன்று (11) காலை நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாம் நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, அந்தப் பெண் நண்பர்கள் குழுவுடன் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது பலத்த அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் தேடுதல் நடவடிக்கையின் போது, அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.