Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸின் மீள்கட்டமைப்பு முயற்சிகள் தீவிரம்

Posted on August 11, 2025 by Admin | 143 Views

(அபூ உமர்)

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், காத்தான்குடி நகரசபையின் நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கட்சிப் போராளிகளும் கலந்து கொண்டனர்