Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

முதல் மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பட்டத்தினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்தும் டாக்டர் சுதைஸ்

Posted on August 13, 2025 by Admin | 369 Views

இன்று வெளியான மகப்பேற்று வைத்திய நிபுணர் இறுதிப் பரீட்சை முடிவுகளின் படி, பாலமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் அவர்கள் சித்தி பெற்றுள்ளார்.

பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இருந்து மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாகும் முதலாவது மருத்துவர் இவரே என்பதால், இச் சாதனையால் பாலமுனை மண்ணும் முழு அட்டாளைச்சேனை பிரதேசமும் பெருமை அடைகிறது.

டாக்டர் சுதைஸ் முகம்மட் அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாமும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்கிறோம்