சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்தச் சர்க்கரை காரணமாக, நேற்று (22) இரவு அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்