முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“முன்னாள் ஜனாதிபதியின் கைது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? அதனால் தான் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“நாங்கள் ஒன்று சேர்வதற்கு யாரும் சிறை செல்ல வேண்டிய அவசியமில்லை, அது ஜே.வி.பியின் நிலைப்பாடு. அவர்கள் ஒன்று சேர்வதற்கு எப்போதும் போராட்டம், தீவைத்து அசம்பாவிதங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது சுயநலனுக்காக அல்ல, மக்களின் பாதுகாப்பும் ஜனநாயகமும் உறுதிசெய்யப்படுவதற்காகவே ஆகும்,” எனத் தெரிவித்தார்.
மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் எதிரியும் யாரும் இல்லை என்பதை நினைவூட்டிய அவர்,
“2005 இல் நாம் ஜே.வி.பியின் நண்பர்கள்; 2015 இல் ரணில் ஜே.வி.பியின் நண்பர்; 2022 இல் நாம் ரணிலின் நண்பர்; இன்று 2025 இல் ரணில் ஜே.வி.பியின் எதிரி. இதனால் மக்களே யார் நண்பர், யார் பகைவர் என குழப்பத்தில் உள்ளனர்,” என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்