Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

Posted on August 25, 2025 by Admin | 237 Views

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று (24) அதிகாலை சந்தித்தார் என சில ஊடகங்களில் வெளியான செய்திகளை, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

“ஹிரு நியூஸ்” வெளியிட்டிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அலுவலகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும், “பிரதமர் ஹரிணி அமரசூரியா மருத்துவமனைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் என்ற செய்தி முழுவதும் தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.