Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 18, 2026

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on August 28, 2025 by Admin | 327 Views

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஒருங்கிணைப்பில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், எம்.ஏ.எம். தாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், நிந்தவூர் பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ. அஸ்பர், பிரதேச சபை உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.