Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மூன்று பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கான்ஸ்டபிள் பிடிபட்டார்

Posted on September 1, 2025 by Admin | 108 Views

பொரளையில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுக்கு மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக, சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு காவல்துறை கான்ஸ்டபிள்களில் ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், காவல்துறை சிறப்பு பணியக தலைமையகத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஆவார் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில் போலீசாரால் பிடிபட்டார் என்று பொரளை காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது அவர் காவல்துறையினரின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர், முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஆவார்; அவர் சில காலங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறை மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.