அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி, சுத்தமான பணிச்சூழலை உருவாக்கும் நோக்கில் “செயிரி வாரம்” எனப்படும் விசேட திட்டம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த திட்டம், அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் ஆரோக்கியமான சூழலில் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அனைத்து அமைச்சுகள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் “க்ளின் சிறிலங்கா” தேசிய முயற்சியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் போது தேவையான மற்றும் தேவையற்ற பொருட்கள் பிரிக்கப்பட்டு, தேவையற்றவை அகற்றப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.