ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி (திங்கட்கிழமை) இச்சட்டம் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்தது.
புதிய சட்டத்தின் படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உள்ளாகுவர். வெளிநாட்டினரானால் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அந்த நாட்டில் குடும்பச் சட்டம் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய ஆட்சியாளரான இப்ராஹிம் டிராரே அதிகாரத்திற்கு வந்த பின், பல துறைகளில் துரிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆபிரிக்காவின் இளம் தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் டிராரே, நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.