Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைப்பு

Posted on September 2, 2025 by Admin | 240 Views

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) கொழும்பில் கூடிய கட்சியின் நிர்வாகக் குழு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை முன்னிறுத்தி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஐ.நா.க பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“ஒத்திவைக்கப்பட்ட ஆண்டு விழா இந்த மாதத்துக்குள் மற்றொரு நாளில் நடத்தப்படும். முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.