இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த துயரச்சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இவ்வைத்தியசாலையில் எலித் தொல்லை அதிகரித்துள்ளதாக ஏற்கனவே பல முறை குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
இந்நிலையில், குழந்தைகள் நல வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மீது எலிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அங்கு சுற்றித் திரிந்த எலிகள் குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை கடித்து குதறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக குழந்தைகள் வலியால் பலத்த துயரம் அனுபவித்ததாகவும், தற்போது அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை மூலங்கள் தெரிவித்துள்ளன