(ஒலுவில் செய்தியாளர்)
வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர். இப்பரீட்சையில் அப் பாடசாலையைச் சேர்ந்த 11 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்துள்ளனர்.
பாடசாலையின் வரலாற்றில் இதுவே அதிக மாணவர்கள் ஒரே நேரத்தில் சித்தியடைந்த சிறப்பான நிகழ்வாகும். இதன் மூலம் பாடசாலையும், ஒலுவில் பிரதேசமும் பெருமை அடைந்துள்ளன.
சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு:
சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் இவர்களை பயிற்றுவித்து வழிநடத்திய ஆசிரியர் ஏ.எல்.எம். றிஸ்கான் மற்றும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.