(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனையை சேர்ந்த மாணவன் என். அப்துல்லா சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவரான அப்துல்லா 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்கேற்று 1.95 மீட்டர் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றார். இதன் மூலம் அவர் புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இவ் வெற்றி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குப் பெருமையைச் சேர்த்ததோடு, மாணவர் அப்துல்லாவுக்கு ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
அப்துல்லா, அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினராக நீண்டகாலமாக விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.