Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நேபாளத்தில் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு

Posted on September 8, 2025 by Admin | 247 Views

நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களைத் தடை செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தலைநகர் காத்மாண்டுவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் நேபாள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.