இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சாரச் சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பான எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி கருத்துகள், பரிந்துரைகளுக்கான பொது ஆலோசனை அமர்வுகள் இம்மாதம் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக PUCSL அறிவித்துள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, மாகாண அளவிலான கலந்தாய்வுகள் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் அக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. முதலாவது பொது கலந்தாய்வு, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 18 ஆம் திகதி தொடங்கப்பட உள்ளது.
எழுத்துப்பூர்வமான கருத்துகள் அக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்:
இது, இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்றாவது மின்சாரக் கட்டண திருத்தமாகும். கடந்த ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது திருத்தத்தின் போது மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது.