Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

கத்தாரின் மீது இஸ்ரேல் தாக்குதல் – கத்தார் கடும் கண்டனம்

Posted on September 9, 2025 by Admin | 406 Views

தோஹாவில் வெடிப்பு சத்தம் – ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்

கத்தாரின் தலைநகர் தோஹாவில் செவ்வாய்க்கிழமை பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஊடகங்கள், மூத்த இஸ்ரேல் அதிகாரியை மேற்கோள் காட்டி….

இந்தத் தாக்குதல் ஹமாஸ் காசா பிராந்தியத் தலைவர் கலீல் அல்-ஹய்யா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. தலைநகரில் புகைமண்டலம் எழுந்ததை அங்கிருந்த சாட்சியாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் இராணுவ வானொலி…

ஹமாஸ் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அறிவித்துள்ளது.

இதேவேளை, கத்தாரின் அல் ஜசீரா தொலைக்காட்சி….

ஹமாஸ் அமைப்பின் ஒருவரை மேற்கோள் காட்டி….

காசாவில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த ஹமாஸ் பிரதிநிதிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கத்தார் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்துப் சர்வதேச சட்டங்களையும் வெளிப்படையாக மீறுவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தோஹா மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தி, அதன் இலக்கு ஹமாஸ் தலைமைப்பிரிவே என அறிவித்துள்ளது. மேலும் விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்தச் சம்பவம் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.