பதுளை மற்றும் ஹாலிஎல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதனால் மலைநாட்டுக்கான தொடருந்து பாதையில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 08.50 மணிக்கு பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்பட்ட பொடி மெனிகே விரைவு தொடருந்து, ஹாலி எல – பதுளை தொடருந்து நிலையத்துக்கு இடையில் காலை 09.10 மணியளவில் தடம் புரண்டது.