Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

பேருந்துகளை அலங்கரிக்கும் சட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது

Posted on September 13, 2025 by Admin | 389 Views

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும் கூடுதல் பாகங்களை பொருத்துவதற்கும் சட்டபூர்வ அனுமதி வழங்கி வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருந்த குறித்த சுற்றறிக்கை கடந்த 9 ஆம் திகதி முதல் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை நிறுவுவதற்கும் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், சமீபத்திய பரிசீலனைகளின் பின்னர் அந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இனி பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவதற்கு சட்டரீதியான அனுமதி கிடையாது என்பதும் உறுதியாகியுள்ளது.