இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பங்கேற்பதற்காக இடம்பெறவுள்ளது.
இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், குறிப்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா பயணத்தைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம்மாதம் 26ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயங்களின் போது, இரு நாடுகளுடனும் இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.