மாரவில முது கட்டுவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது …
கரை ஒதுங்கியிருந்த சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லை. நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.