(பாலமுனை செய்தியாளர்)
அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க பாலமுனை அரசடி வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக 9.5 மில்லியன் ரூபா செலவில் 105 மீற்றர் காங்கிரீட் போடுதல் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 13.09.2025ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மேலும், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியாளர் முனாஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபை பொறியியாளர்கள் மற்றும் அதிகாரிகள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.