(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 3ஆவது அமர்வு நேற்று (17) புதன்கிழமை சபை மண்டபத்தில் கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வானது மக்களின் அத்தியவசிய தேவைகள் மற்றும் சேவைகள் குறித்த விவாதங்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்ததாக அமைந்தது.
கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.அன்ஸில், ஏ.எல்.பாயிஸ்,ஐ.எல்.அஸ்வர் சாலி, எம்.எல்.றினாஸ் ஆகியோர்கள் தங்கள் வட்டாரத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அவற்றுக்கு துரிதமான தீர்வுகளை கோரினர்.
கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள்,பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த தீர்வுகளுக்கான முன்மொழிவுகள் குறித்தும் ஆழமாக கவனம் செலுத்தி, “மக்களின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சபை மட்டுமின்றி, நிர்வாக அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையானது மக்களின் தேவைகளை தீர்க்கும் வகையில் செயற்படத் தயாராக இருப்பதை இன்றைய அமர்வு வெளிப்படுத்தியது.