Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஐ.நா.வின் 80வது பொதுச் சபையில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி

Posted on September 22, 2025 by Admin | 241 Views

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு புறப்படுகிறார். இப்பயணத்தின் போது அவர், ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

அதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனும் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

இப்பயணத்தில் ஜனாதிபதியுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து செல்கிறார்