Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 18, 2026

டொனால்ட் ட்ரம்பின் கனவு நொறுங்கியது

Posted on October 10, 2025 by Admin | 269 Views

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தவும், சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயக மாற்றத்தை அமைதியான முறையில் முன்னெடுக்கவும் அவர் செய்த முயற்சிகளைப் பொருட்படுத்தி இந்த விருது வழங்கப்பட்டதாக நோபல் குழு அறிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பெரிதும் எதிர்பார்த்திருந்தார். தாம் உலகளவில் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், அதற்காக தமக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

ட்ரம்பை ஆதரித்து பாகிஸ்தான், இஸ்ரேல், ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் போன்ற நாடுகளும் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தன. மேலும், காசா போரினை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த முயற்சிகளின் பின்னணியிலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்பின் பெயரை மீண்டும் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் இறுதியில், நோபல் குழு தனது தீர்ப்பை வெனிசுவேலா ஜனநாயக போராட்ட வீராங்கனை மச்சோடாவுக்கு வழங்கி உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் மூலம், ட்ரம்பின் நோபல் கனவு முற்றிலும் நொறுங்கியது. வரலாற்றில் இதுவரை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா.

அந்த பட்டியலில் ட்ரம்ப் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.