Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on October 15, 2025 by Admin | 259 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இறக்காமம் பிரதேச அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15.10.2025) பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம். முஸ்மி, பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பிரதேச மக்களின் நலனையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கான பல முக்கியமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.