Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

இன்று இரவு வரை பல மாகாணங்களை தாக்கப்போகும் கடும் இடி மின்னல்

Posted on October 18, 2025 by Admin | 450 Views

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுடன் அம்பாறை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலால் ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் சேதங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.