Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

நாளை தீபாவளி தினத்தில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

Posted on October 19, 2025 by Admin | 230 Views

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (20) காலை 8.00 மணி முதல் மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை மொத்தம் 30 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை, காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர பழுதுபார்ப்பு பணிகளின் காரணமாக அமுல்படுத்தப்படுகிறது.

இதனால், போபே, போத்தல, அக்மீமன மற்றும் ரத்கம பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும். அதேவேளை, அஹங்கம பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் வழங்கப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகம் தடைப்பட்டதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.