Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

22 உயிர்களை பறித்த டெங்கு 

Posted on October 19, 2025 by Admin | 371 Views

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழை மற்றும் ஈரமான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 40,392 டெங்கு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலைமையை முன்னிட்டு, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.