Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

சட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்குவது குறித்து அரசின் நிலை

Posted on October 21, 2025 by Admin | 420 Views

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அடையாளச் சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.