(அபூ உமர்)
பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் பிரதிநிதிகள் குழு 2025.10.26ம் திகதி பலாங்கொடை பகுதிக்கு விஜயம் செய்தது.
இவ்விஜயத்தல் SLMC பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், பிரதித்தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான எஸ்.எம்.எம். முஷர்ரப் முதுநபீன், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி அப்துல்லாஹ், செயலாளர் சிராஸ் சம்சுதீன், உபதலைவர் சிராஜ் நஜாஹி, சல்மான் நஜாஹி, உலமாக்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபுபக்கர், தொழிலதிபர் கபூல் ஆஸாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் தொடர்பான சில குறைபாடுகள் குறித்தும் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

