Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சிறப்பாக நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on October 29, 2025 by Admin | 234 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29.10.2025) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கே.டி. கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம். ரத்வத்த, மற்றும் சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், சமூக நலத்திட்டங்கள், மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.