இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (29) ரூபா.2,000 அளவுக்கு சரிந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவலின்படி, இன்று காலை 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.2,94,000 ஆகக் குறைந்துள்ளது. நேற்றைய (28) விலை ரூபா.2,96,000 ஆக இருந்தது.
அதேபோன்று, நேற்று ரூபா.3,20,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் இன்று ரூபா.3,18,000 ஆகக் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.