Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

99 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் ஹுஸைன் அஹமட் பஹிலா கைது

Posted on October 31, 2025 by Admin | 363 Views

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று (31) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டு அந்த கூட்டுத்தாபனத்திற்காக 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாததால் கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்பட்டதோடு வெளித் தரப்பினருக்கு அதே அளவு இலாபம் கிடைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 8.30 மணியளவில் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஹுஸைன் அஹமட் பஹிலா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.