பாதுகாப்பு தேவையுள்ளதாக கோரிக்கை வைத்துள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் கோரிக்கையைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று (31) பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு கோரும் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.