Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்

Posted on November 7, 2025 by Admin | 266 Views

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (7) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள நிலையில் அவர் நாட்டிற்கு திரும்பும் வரையிலும் செயற்படும் வகையில் இந்த இடைக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் கலந்து கொண்டார்.