Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் ஒக்டோபர் மாத செயற்பாடுகளின் தரப்படுத்தல்

Posted on November 15, 2025 by Admin | 397 Views

கடந்த மாதம்(ஒக்டோபர்) நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் சமர்ப்பித்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தெளிவு தளம் உறுப்பினர்களை தரப்படுத்தல் செய்துள்ளது. இதில் அதிகபட்ச பிரேரணைகள் சமர்ப்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

  • கெளரவ ஏ.சி.எம். நியாஸ் – 9 பிரேரணைகள்
  • கெளரவ ஏ.எல். பாயிஸ் – 5 பிரேரணைகள்
  • கெளரவ எ.எல். அஸ்வர் – 4 பிரேரணைகள்
  • கெளரவ எஸ்.ஐ. ரியாஸ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ ஐ.ஏ. சிறாஜ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ சி.எம். ஜனூஸா – 3 பிரேரணைகள்
  • கெளரவ எஸ். பாஹிமா – 2 பிரேரணைகள்

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், மற்ற உறுப்பினர்கள் யாரும் கடந்த மாத அமர்வில் பிரேரணைகள் சமர்ப்பிக்கவில்லை.

சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்கள்

கடந்த மாத சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்களின் பட்டியல்:

  • கெளரவ எம். ரியா
  • கெளரவ ஏ.எல். அமானுல்லாஹ்

இந்த தகவல்கள் சபை செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.