(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம்(பாதீடு) கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இன்று (19) நடைபெற்ற 05வது அமர்வில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமர்வில் முன்வைக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்திற்கு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த ஏழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் என மொத்தம் 13 உறுப்பினர்கள் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) சார்ந்த மூன்று உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். மேலும், இன்றைய அமர்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏ.எல். அமானுல்லாஹ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.எப். மின்ஹா ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தத்தில் 10 மேலதிக வாக்குகளினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் நிறைவேறியது.