Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை 

Posted on November 19, 2025 by Admin | 250 Views

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயங்களை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.