நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் உருவான பாதிப்புகளின் காரணமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு கடந்த 27ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறை டிசம்பர் 5ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கப்படுவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.