கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், அண்மைய அனர்த்தத்தால் பாதிப்பு இல்லாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் வரும் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் செயல்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் டிசம்பர் 16ஆம் திகதி முதல் வழமையான கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.