(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இயற்கையின் சீற்றத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் பொருட்கள் சேகரிக்கும் செயற்பாடானது நேற்றைய தினம்(01) ஆரம்பிக்கப்பட்டு இன்று(02) இரவு 12:00 மனி வரை இடம்பெறவுள்ளது.
கடந்த 05 நாட்களாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முறையான மின்சார வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் இன்மையால் இச்செய்தி அட்டாளைச்சேனை மக்களை சென்றடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே, இச் செய்தியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் எம்மால் இயன்ற பொருட்களை வழங்கி எம் உறவுகளின் துயர் நீக்க முன்வருவோம். இச்செயற்பாடு மூலம் உங்களது சிறு உதவியும் பலரின் உயிரைப் பாதுகாக்கும் பெரும் உதவியாக மாறும்.