போக்குவரத்து சேவைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சேவைகளை முழுமையாக நூறு சதவீதம் மீட்பது சவாலானதாக இருந்தாலும் பெரும்பாலான பாதைகளில் பேருந்து போக்குவரத்தை டிசம்பர் 31க்குமேலும் முன்னதாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் இதன் மூலம் பொதுமக்களின் தினசரி வாழ்க்கை மீண்டும் சீர்பெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதே சமயம் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு்பல்வேறு கட்டுமான நடவடிக்கைகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.