Top News
| மல்யுத்த ஜாம்பவான் ஜோன் சினாவின் இறுதிப் போட்டி நாளை | | துயரத்தில் தோள்கொடுக்க அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்ட சேவை வீரர்களின் பணிகள் ஆரம்பம் | | டிட்வா பேரிடரில்கா ணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை |
Dec 13, 2025

பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையில் அதிகரிப்பா?

Posted on December 11, 2025 by Hafees | 74 Views

முட்டை விலையை அதிகரிக்காது, 45 ரூபாய்க்குக் குறைவாக முட்டையை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வெளியிடும் தகவல்களில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது எனவும் அந்தச் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலரால் இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

45 ரூபாய்க்கும் குறைவான விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.